எனக்கு ஏதாவது ஆச்சுனா அவர்கள்தான் காரணம்- நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

கடந்த சில மாதங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன்.கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
எனக்கு ஏதாவது ஆச்சுனா அவர்கள்தான் காரணம்- நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ
Published on

மலையாள நடிகையான ரேகா ரதீஷ், சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க பேசும்போது, "கடந்த சில மாதங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் மகனும் உள்ளான். இதற்கிடையில் யூ-டியூபர்கள் சிலர் என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். என் மகனுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் எனக்கு இது போன்ற மன அழுத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அந்த யூ-டியூபர்கள் தான் காரணம். அவர்கள் மீது கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்". என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com