திஷா பதானி அணிந்திருக்கும் சேலை விலை ரூ.5.58 லட்சம்

ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் அணிந்துள்ள சேலை விலையை கேட்டால் மூக்கின் மேல் விரலை வைக்க வைக்கிறது.திஷா பதானி அணிந்திருக்கும் புடவை விலை நடுத்தர குடும்பத்தின் காரின் விலைக்கு சமமானது என சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பரவலாகி வருகிறது.
திஷா பதானி அணிந்திருக்கும் சேலை விலை ரூ.5.58 லட்சம்
Published on

சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் கவர்ச்சியான அழகியாக இருந்து வரும் திஷாபதானி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை வியக்க வைத்து வருகின்றன.

இந்நிலையில் ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் அணிந்துள்ள சேலை விலையை கேட்டால் மூக்கின் மேல் விரலை வைக்க வைக்கிறது. காஞ்சிபுரம் பாரம்பரிய புடவையுடன் தங்க காதணிகள் மற்றும் நெக்லஸ் அணிந்து பின்னப்பட்ட ஜடையை முன்னாள் போட்டு சேலையை கைகளில் தவழவிட்டபடி எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

இதைவிட பெரிய 'ஹைலைட்' திஷாபதானி அணிந்திருக்கும் சேலையின் விலை. திஷா பதானி அணிந்திருக்கும் கண் கவர் சேலையின் விலை ரூ.5.58 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. திஷா பதானி அணிந்திருக்கும் புடவை விலை நடுத்தர குடும்பத்தின் காரின் விலைக்கு சமமானது என சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பரவலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com