'மனதை திருடி விட்டாய்' பட இயக்குனர் நாராயணமூர்த்தி காலமானார்

நாராயணமூர்த்தி இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. நாராயணமூர்த்தி உடலுக்கு திரை உலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.
'மனதை திருடி விட்டாய்' பட இயக்குனர் நாராயணமூர்த்தி காலமானார்
Published on

கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியான 'மனதை திருடி விட்டாய்' படத்தை இயக்கியவர் ஆர்.டி.நாராயண மூர்த்தி (வயது 59). இந்த படத்தில் இடம் பெற்ற பிரபுதேவா, வடிவேலு, விவேக் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிக்கும்படியாக உள்ளது.

அடுத்ததாக ஒரு பொண்ணு, ஒரு பையன் படத்தை நாராயணமூர்த்தி இயக்கி இருந்தார். தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார். இயக்குனர் நாராயணமூர்த்திக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணியளவில் இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்.

அவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகன் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் நாராயணமூர்த்தி இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு திரை உலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com