நடிகர் கார்த்திக் பற்றி பேசிய இயக்குநர் பாரதி கண்ணனுக்கு மிரட்டல்

இயக்குநர் பாரதி கண்ணன் நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
நடிகர் கார்த்திக் பற்றி பேசிய இயக்குநர் பாரதி கண்ணனுக்கு மிரட்டல்
Published on

தமிழ் சினிமாவில் 1990-2000களில் வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பாரதி கண்ணன். இவர், அருவா வேலு, திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் பேசியபோது, நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது, நடிகர் கார்த்திக் படத்தில் நடித்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் முன்பணம் வாங்கினார். ஆனால், தயாரிப்பாளர் கார்த்திக்கை வைத்து நாம் படம் எடுக்க வேண்டாம் என்று கூறி கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிவிட சொன்னார்.

ஆனால், "கார்த்திகிடம் பணம் போனால் திரும்ப வராது என திரைத்துறைக்கே தெரியும்.. உங்களுக்கு தெரியாதா" என கார்த்திக் கூறியதாக பாரதி கண்ணன் கார்த்திக் போலவே மிமிக்ரி செய்து கூறினார்.

இந்த நேர்காணல் வைரலானது. இந்த நிலையில், பாரதி கண்ணன் மீண்டும் ஒரு நேர்காணலில் பேசியபோது கார்த்து தொடர்பாக பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பாரதி கண்ணன்," நடிகர் கார்த்திக் குறித்து நான் சாதாரணமாக தான் கூறினேன். அது இவ்வளவு பெரிய விஷயம் ஆகும் என்று நினைக்கவில்லை. அது பல ஆண்டுகள் முன்பு அனுபவித்த வலி. இப்போது அதெல்லம் மறைந்துவிட்டது.

இதுதொடர்பாக நடிகர்கள் பிரபு, ராதா ரவி ஆகியோரும் தன்னிடம் பேசி இனி கார்த்திக் பற்றி இதுபோல் பேசவேண்டாம் என்று கூறினர்.

கார்த்திக்கின் ஆதரவாளர்கள் பலரிடம் இருந்து எனக்கு மென்மையான மிரட்டல்களும் விடுத்தனர். நான் கார்ததிக் பற்றி பேசியது யாரையாவது காயப்படுத்தியிந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com