என் மலர்
சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் "பைசன்" படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்..!
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படம் உருவாகியுள்ளது.
- பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Next Story






