என் மலர்
சினிமா செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார்: பாலிவுட் இசையமைப்பாளர் கைது
- ஆல்பத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி போன் நம்பர் வாங்கியுள்ளார்.
- ஸ்டூடியோவுக்கு அழைத்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பாலிவுட்டை சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான சச்சின் சங்வி மீது பெண் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stree 2 மற்றும் Bhediya உள்ளிட்ட ஹிட் பாடலை கொடுத்தவர் சச்சின் சங்வி. இவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்டதாக 20 வயது இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணிற்கு சங்வி தகவல் அனுப்பியுள்ளார்.
அவருடைய ஆல்பத்தில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். அந்த பெண்ணும சங்வி எண்ணை வாங்கியுள்ளார்.
அந்த பெண்ணை ஒருநாள் ஸ்டூடியோவிற்கு வரவழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்ய இருப்பதாக தெரவித்துள்ளார். அத்துடன் பல சமயங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.






