என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பாபி சிம்ஹா
    X

    பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பாபி சிம்ஹா

    • வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
    • திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'சூது கவ்வும்', 'பகலவன்', 'ஜிகர்தண்டா', 'மகான்' போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

    'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

    இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம் செய்தார். இதன்பின், அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    Next Story
    ×