நாளை புதுப்பட அறிவிப்பை வெளியிடுகிறது குட் நைட், டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பு நிறுவனம்

குட் நைட், டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் ரீதியாகவம், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்திருந்தது.
நாளை புதுப்பட அறிவிப்பை வெளியிடுகிறது குட் நைட், டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பு நிறுவனம்
Published on

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் நடிப்பில் 2023 ஆண்டு வெளியான படம் 'குட் நைட்'. குறட்டை விடுபவனின் வாழ்க்கையையும் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை இப்படம் அழகாக வெளிக்காட்டி இருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகன் மணிகண்டனுக்கும், கதாநாயகி மீதா ரகுனாத்துக்கும் நல்ல புகழும், பேரும் கிடைத்தது. இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது. கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் பாதிகப்பட்ட தமிழ் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்து எதிர்கொள்ளும் சிக்கலை இயக்குநர் நகைச்சுவை கலந்த எமோசனல் குடும்ப படமாக உருவாக்கியிருந்தார்.

இரண்டு படங்களையும் தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது. இதில் ஒருசில படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த நிலையில் தனது 8-வது படம் குறித்து தகவலை ஆங்கில புத்தாண்டான நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த படமும் குட்நைட், டூரிஸ்ட் பேமிலி போன்று நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com