என் மலர்
சினிமா செய்திகள்

மு.க.முத்து உடலுக்கு நடிகர் விக்ரம் நேரில் அஞ்சலி
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
- சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மறைந்த மு.க.முத்துவுக்கு அரசியல் துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விக்ரம் தனது மகள் அக்ஷிதாவை மு.க. முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






