என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் மனோஜ் மறைவு- இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல்
    X

    நடிகர் மனோஜ் மறைவு- இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல்

    • நடிகர் மனோஜ் மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.

    இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோவில் அவர் குறிப்பிடுகையில், " எனது நண்பன் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இப்படியொரு சோகம் பாரதிராஜாவுக்கு நிகழ்ந்திருக்க கூடாது.

    மனோஜ் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×