என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு - உதவி கோரும் தனுஷ் பட நடிகர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு - உதவி கோரும் தனுஷ் பட நடிகர்

    • சிறப்பு தோற்றம் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றி வந்தார்.
    • விளரம்பரங்களில் நடித்து உள்ளார்.

    கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானவர் அபிநய். மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அபிநய் இப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கால் பதித்தார். மலையாளம், தமிழ் என சின்ன படங்களில் நடித்து வந்த இவர் சிறப்பு தோற்றம் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் விளரம்பரங்களில் நடித்து உள்ளார்.

    இந்த நிலையில், நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயின் பாதிப்பால் வயிறு வீங்கி ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×