என் மலர்

  சினிமா செய்திகள்

  சுரேஷ் காமாட்சி
  X
  சுரேஷ் காமாட்சி

  ”வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா” - சுரேஷ் காமாட்சி வேதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் 75-வது நாள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

  சுரேஷ் காமாட்சி

  இப்படம் தற்போது வெளியாகி 75-வது நாளை கடக்கிறது. இதனிடையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய சமூக வலைத்தளத்தில் சில விஷயங்களை பதிவிட்டிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பது. படம் வெளியாகி 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றி படத்திற்கே இந்த நிலைன்னா மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல.. என்று பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  Next Story
  ×