என் மலர்
சினிமா செய்திகள்

வேலன் பட போஸ்டர்
அப்பனோட பகை மட்டுமில்ல... வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்... வேலன் படத்தின் டிரைலர்
கவின் இயக்கத்தில் முகின், மீனாக்ஷி, பிரபு, சூரி, தம்பி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் வேலன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். இதில் முகின், அப்பனோட பகை மட்டுமில்ல... வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது.
Next Story






