என் மலர்
சினிமா

மீண்டும் இந்தி சினிமாவுக்கு திரும்பிய இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா, தற்போது இந்தி படங்களில் மீண்டும் கவனம் செலுத்த இருக்கிறார். #Ileana
தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமான இலியானா இங்கு பிசியாக இருக்கும்போதே இந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கே தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் வர தென் இந்திய மொழிகளை மறந்து அங்கேயே செட்டில் ஆனார்.
கடந்த ஆண்டு சில படங்கள் சரியாக போகாததால் ஆறு வருடங்களுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவுக்குத் திரும்பினார். ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார்.

படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் இப்போது மீண்டும் இந்தி சினிமாவுக்கே திரும்பி விட்டார். ஜான் ஆபிரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
Next Story






