என் மலர்
சினிமா

ஜீவா, அருள்நிதி இணையும் படத்தில் மஞ்சிமா மோகன்
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் `தேவராட்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் அடுத்ததாக ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார்.
நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார். இரண்டு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 13-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan
Next Story






