என் மலர்
சினிமா

நடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாருக்கும், பிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்தது. #SujaVarunee #SivaKumar
ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சுஜா வருணி, மிளகா, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான சுஜா வருணியும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் காதலித்து வந்தனர்.
சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அவர்களது திருமணம் சென்னையில் இன்று நடந்தது முடிந்தது.

திருமணத்தில் நடிகர் சிவக்குமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விஷ்ணு வர்தன், சினேகன், ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, லிசா, சுஹாசினி, ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், கணேஷ் வெங்கட்ராம், சந்தியா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் துர்கா ஸ்டாலின் பங்கேற்றனர்.
சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள தான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நடிகை சுஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SujaVarunee #SivajiDev
Next Story






