என் மலர்
சினிமா

திருமணத்துக்கு தயாரான இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான இலியானா, நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு திருமணத்துக்கு தயாராகி வருகிறார். #Ileana
தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த இலியானா தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில மாதங்களாக இலியானா, ஆண்ட்ரூ என்ற ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரை காதலிப்பதாக செய்திகள் வந்தன.
இருவரும் கடற்கரையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வெளியாகின. இலியானா கையில் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து நடிக்கவும் இலியானா ஆர்வம் காட்டவில்லை.

எனவே விரைவில் இலியானா நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று செய்தி பரவுகிறது.
Next Story






