என் மலர்
சினிமா

அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
`மேயாத மான்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியா பவானி சங்கர், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை என்று கூறியுள்ளார். #PriyaBhavaniShankar
`மேயாத மான்' படம் மூலம் கவனிக்க வைத்த பிரியா பவானி சங்கர், `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்தார். அடுத்து அதர்வா நடிக்கும் `குருதி ஆட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். `8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.
கட்டுக்கோப்பான உடலுக்காக தான் கடைப்பிடிக்கும் உணவுக் கட்டுப்பாடு பற்றி பிரியா பவானி ஷங்கர் கூறும்போது ’சைவம், அசைவம், சைனீஸ் என எல்லா வகை உணவுகளையும் நிறைய சாப்பிடுவேன். ஆரோக்கிய பானம் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்.

என்னுடைய பேவரைட் உணவு பாசுமதி அரிசியில் செய்யப்பட்ட செட்டிநாடு மட்டன் பிரியாணிதான். சில நாள்களாக வெஜிடேரியனாக இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். ஒரு பொண்ணு அழகா, ஒல்லியா இருக்கணும். வெயிட் போடக்கூடாது. இதுலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும். உடலை ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதுதான் முக்கியமே தவிர, உடம்பை வருத்திக்கிறதுல இல்லை’ என்று கூறி இருக்கிறார். #PriyaBhavaniShankar
Next Story






