என் மலர்

  சினிமா

  சில்க் சுமிதா நடித்த கடைசி படம் திரைக்கு வருகிறது
  X

  சில்க் சுமிதா நடித்த கடைசி படம் திரைக்கு வருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சில்க் சுமிதா கடைசி நடித்து வெளிவராமல் இருந்த ‘ராக தாளங்கள்’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். #SilkSmitha #RaagaThaalangal
  சில்க்சுமிதா 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர். கடந்த 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். 

  அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் இதுபற்றி கூறும்போது ‘1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம் ஆனார்.   அவர் நடித்த கடைசி படம் இதுதான். 1995-ல் இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆனது. எனவே ரிலீஸ் செய்ய முடியவில்லை. இப்போது ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளேன்’ என்றார். சில்க்கு சுமிதாவின் மரணம் பற்றி கேட்டபோது ‘அவரது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை. அதுபற்றி விசாரித்தால் மழுப்பி விடுவார். 

  தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னை பார்க்க வர சொன்னார். ஆனால் சிலர் என்னை விடவில்லை’ என்று கூறினார். #SilkSmitha #RaagaThaalangal

  Next Story
  ×