என் மலர்
சினிமா

காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
தமிழ்ப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான திஷா பாண்டே, தற்போது காமெடியுடன் கூடிய திகில் படத்தில் நடித்து வருகிறார். #DishaPandey
தமிழ்ப்படம் முதல் பாகத்தில் அறிமுகமானவர் திஷா பாண்டே. தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம் 2’வில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தார். இவர் அடுத்து காமெடி நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கொம்பு என்ற படத்தில் நடிக்கிறார்.
திகிலுடன் நகைச்சுவையான படமாக உருவாகி வரும் ‘கொம்பு’ படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகளையும் பற்றி பேசுகிறது என்கிறார் இயக்குனர் ஈ.இப்ராகிம்.
ஜீவா, திஷா பாண்டேவுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். எம்.பன்னீர்செல்வம், பி.வானதி தயாரிப்பில் தேவ்குரு இசை அமைக்க சுதீப்பின் ஒளிப்பதிவில் உருவாகி உள்ளது கொம்பு திரைப்படம்.
Next Story






