என் மலர்
சினிமா

மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
குற்றம் 23 படத்தை அடுத்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தடம்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Thadam #ArunVijay
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தடம்’. இதில் அருண் விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெறப்பட்டது.

‘குற்றம் 23’ திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது ‘தடம்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Next Story






