என் மலர்
சினிமா

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி
யுரோகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் காட்டுப்பய சார் இந்த காளி படத்தின் மூலம் மிஸ் தென் இந்திய அழகி ஐரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். #KaatupayaSirInthaKaali
தமிழ் சினிமாவில் அதிகமாக வெளி மாநிலங்களில் இருந்துதான் கதாநாயகிகள் அறிமுகம் ஆகிறார்கள். அந்த வரிசையில் ராஜஸ்தான் பெண்ணான ஐரா, காட்டுப்பய சார் இந்த காளி படம் மூலம் அறிமுகம் ஆகிறார்.
அவர் தமிழ்நாட்டுக்கு வந்தது பற்றி கூறும்போது ‘என்னுடைய முதல் படம் தாயம். காட்டுப்பய சார் இந்த காளி படமே தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியது தான். டைரக்டர் யுரேகா தேடியபோது தமிழ் பேசும் தமிழ்பெண்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை.

நான் பார்ப்பதற்கு தமிழ் பெண்ணை போல இருப்பதால் என்னை தேர்ந்தெடுத்தார். இந்த படத்தில் ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம். 2014 மிஸ் தென் இந்தியா போட்டியில் தமிழ்நாட்டு சார்பில் கலந்துகொண்டு ஜெயித்தேன். என் அம்மா ராஜஸ்தானி என்றாலும் நான் சென்னையில் இருந்து இருக்கிறேன். எனவே நன்றாக தமிழ் பேசுவேன். தமிழ் சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். பிற மாநிலங்களுக்கு சென்றால் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது. 40-க்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளேன். அடுத்து தமிழ், தெலுங்கில் ஒவ்வொரு படம் நடிக்கிறேன்’ என்றார். #KaatupayaSirInthaKaali
Next Story






