என் மலர்
சினிமா

இலியானாவின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா?
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா, அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதிகம் பேர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். #Ileana
தமிழில் சரியான இடம் கிடைக்காததால் நடிகை இலியானா தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இலியானா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிஜி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு 7 லட்சத்திற்கும் மேலாக லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
Next Story






