என் மலர்
சினிமா

நடிகருடன் காதலா - மஞ்சிமா மோகன் விளக்கம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் ரிஷிக்கும் காதல் என வெளியான தகவல் குறித்து மஞ்சிமா விளக்கம் அளித்துள்ளார். #ManjimaMohan
நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரிஷியை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன்.

நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறார். மேலும் இதுவரை யாரும் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவே இல்லை. அப்படியே கூறினாலும் தனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருக்கிறார். #ManjimaMohan
Next Story






