search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர்
    X

    வில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர்

    தன்னுடைய ஓவியம் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படம் மூலம் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார். #APShreethar #AndhraMess
    விரைவில் வெளியாக இருக்கும் ஆந்திரா மெஸ் படம் ஆரண்ய காண்டத்தை போல பாராட்டப்படும் என்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரும் அதை நிரூபிக்கிறது. விளம்பரப் படங்களை இயக்கிவந்த ஜெய் இயக்குனராக அறிமுகமாகும் ஆந்திரா மெஸ் படத்தில் ராஜ் பரத் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடித்துள்ளார். பூஜா தேவாரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடக்கும் மோதல்களையும் முரண்களையும் வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு முகேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரான இவர் இந்தியில் வெளியான ‘சைத்தான்’, ‘டேவிட்’ மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ‘ஆமென்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.



    பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் ‘ஆந்திரா மெஸ்’ படம் மூலம் வில்லனாக அறிமுகம் ஆகிறார். ஓவியம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது வில்லனாக மிரட்ட வருகிறார்.
    Next Story
    ×