என் மலர்
சினிமா

பாபி சிம்ஹாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்
கருப்பன், திருட்டு பயலே 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக பாபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. #BobbySimha
ஜிகர்தண்டா படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகர் பாபி சிம்ஹா. இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘கருப்பன்’, ‘திருட்டு பயலே 2’ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இவரது நடிப்பில் ‘சாமி ஸ்கொயர்’ உருவாகியுள்ளது. இதில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார் பாபி சிம்ஹா. இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘அக்னி தேவ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ள இப்படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரில் போடப்பட்டது. இதில் பாபி சிம்ஹாவுடன் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
Next Story






