என் மலர்
சினிமா

`வடசென்னை' படப்பிடிப்பில் விஜய் சேதுபதி: தனுஷ் பங்கேற்பாரா?
`வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டதற்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
நடிகர் தனுஷின் `வட சென்னை' படத்தில் தனுஷ் - விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், `வடசென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் துவங்க உள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி பங்கேற்பார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது, `பவர்பாண்டி' போஸ்ட் புரெக்ஷன் பணியிலும், `விஐபி 2'-விலும் நடித்து வருகிறார். இந்த பணிகள் பிப்ரவரியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் `வடசென்னை' படத்தில் நடிக்க உள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரியாத புதிர்' பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதுதவிர 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.

Next Story