என் மலர்tooltip icon

    சினிமா

    பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா
    X

    பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா

    சூர்யா பொது மேடையில் மன்னிப்பு கேட்ட விஷயம் நடந்துள்ளது. அது எதற்காக என்பதை கீழே பார்ப்போம்...
    சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர்.

    அப்போது பேசிய பயில்வான் ரெங்கநாதன் தனது மகளின் திருமணத்திற்கு சூர்யா அலுவலகத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தன்னை யாரும் சரியாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்கும்விதமாக அதேமேடையிலேயே சூர்யா பேசும்போது, முதலில் நான் பயில்வான் அண்ணன் பேச்சுக்கு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன விஷயம் இதுவரை என்னுடைய காதுகளுக்கு வரவில்லை.

    இருப்பினும் இந்த மேடையில் அந்த விஷயத்தை பதிவு செய்ததற்கு நன்றி. நிச்சயமாக நாங்கள் அதை திருத்திக் கொள்கிறோம். அப்பாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிற விஷயங்கள் அவருடைய உறவுகள்தான். மற்றவர்களுக்கு அவர் மதிப்பு கொடுக்கிற விஷயங்களைத்தான் முதன்மையாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.

    அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும், என்னுடைய அலுவலகத்தை சேர்ந்தவர்களும் அதை திருத்திக் கொள்கிறோம் என்றார். 
    Next Story
    ×