என் மலர்
சினிமா

கடம்பனுக்காக தாய்லாந்து செல்லும் ஆர்யா
ஆர்யா தற்போது நடித்துவரும் ‘கடம்பன்’ படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் தாய்லாந்து செல்லவிருக்கிறார்.
ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கும் ‘கடம்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் அருகில் தாண்டிக்குடி கிராமத்தில் தொடங்கியது.
அங்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடி ரூபாய் செலவில் மலைவாழ் மக்களின் கிராமத்தை போன்று செட் அமைத்து 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர். இந்த செட்டை ஆர்ட் டைரக்டர் மோகன் உருவாக்கியிருந்தார். இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தவுள்ளனர்.
இதற்காக படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து பயணமாக உள்ளனர். அங்கு தொடர்ச்சியாக 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிகரித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவுள்ளார். ஆர்யாவின் நண்பர் ஜீவா இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Next Story