என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் பேய் படத்தில் திரிஷா
    X

    மீண்டும் பேய் படத்தில் திரிஷா

    திரிஷா நடித்த ‘அரண்மனை 2’ படம் சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து மீண்டும் பேய் படத்தில் நடிக்க இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் 13 ஆண்டுகளாக கதாநாயகியாக கலக்கி வருபவர் திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த ‘அரண்மனை – 2’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

    தற்போது ‘நாயகி’ என்ற ‘திகில்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இது தவிர தனுசுடன் ‘கொடி’, ‘காற்று வாக்குல ரெண்டு காதல்’, ‘போகி’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

    இந்நிலையில் ‘மதுர’ இயக்குனர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் நாயகி படம் போல திகில் கலந்த பேய் படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு இசை அமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் ஆகியோர் இசை அமைக்கிறார்கள். இது குறித்து தெரிவித்த அவர்கள், முதன் முறையாக ஒரு திகில் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறோம். இது மிக சவலாக இருக்கும். இந்த படத்துக்காக 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறி உள்ளனர்.

    இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. திரிஷா நடிக்கும் இந்த பேய்படம் பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×