search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்தியா வரும் லம்போர்கினி உருஸ் எண்ட்ரி லெவல் மாடல்?
    X

    விரைவில் இந்தியா வரும் லம்போர்கினி உருஸ் எண்ட்ரி லெவல் மாடல்?

    • லம்போர்கினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய உருஸ் எண்ட்ரி லெவல் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • புதிய உருஸ் மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் உருஸ் எஸ்யுவி-க்கு மாற்றாக இருக்கும் என தெரிகிறது.

    ஆடம்பர கார் உற்பத்தியாளரான லம்போர்கினி தனது எண்ட்ரி லெவல் உருஸ் S மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் உருஸ் எஸ்யுவி-க்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய மாடல் உருஸ் பெர்ஃபோர்மண்ட் எஸ்யுவி-யின் கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக லம்போர்கினி உருஸ் நீடிக்கிறது. கடந்த ஆண்டு லம்போர்கினி விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உருஸ் எஸ்யுவி யூனிட்கள் இருந்தன. கடந்த ஆண்டு மட்டும் லம்போர்கினி நிறுவனம் 200-க்கும் அதிக உருஸ் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் லம்போர்கினி உருஸ் S மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய உருஸ் S மாடல் உருஸ் பெர்ஃபார்மண்ட் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன.

    இந்த எஸ்யுவி மாடலில் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×