search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    60 கிமீ வேகம்.. 104 கிமீ ரேன்ஜ்.. கைனெடிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
    X

    60 கிமீ வேகம்.. 104 கிமீ ரேன்ஜ்.. கைனெடிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

    • இந்த ஸ்கூட்டர் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
    • கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்படுகிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக பிரபல மாடல்களான லூனா மற்றும் கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த கைனெடிக் கிரீன் இந்தியாவில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. கைனெடிக் ஜூலு (Zulu) என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

    ஹப் மோட்டார் மூலம் இயங்கும் கைனெடிக் ஜூலு 2.1 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர்கள் வரையிலான வேகத்தில் செல்லும். இந்த மாடலில் 2.27 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    எனினும், போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 75 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த மாடல் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும்.

    கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டுவின் ஷாக் அப்சார்பர்கள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், 10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்.சி.டி. யூனிட், எல்.இ.டி. டி.ஆர்.எல். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கைனெடிக் ஜூலு மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 490, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×