search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    120கிமீ ரேன்ஜ் கொண்ட ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை இவ்வளவு தானா?
    X

    120கிமீ ரேன்ஜ் கொண்ட ஹாப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை இவ்வளவு தானா?

    • ஹாப் எலெக்ட்ரிக் நிறுவன்தின் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    • ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அந்நிறுவன வலைதளம், எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் நடைபெற இருக்கிறது.

    ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹை-ஸ்பீடு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹாப் எலெக்ட்ரிக் நிறுவன வழக்கப்படி குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும். முற்றிலும் புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 120 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் ஹை ஸ்பீடு வேரியண்ட் எஃப்ளோ தொழில்நுட்பம், 72 வோல்ட் ஆர்கிடெக்ச்சரில் கிடைக்கும். இதில் உள்ள மோட்டார் 2200 வாட் பீக் பவர் மற்றும் 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இது எண்ட்ரி லெவல் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். இதில் உள்ள பிஎல்டிசி ஹப் மோட்டார் எஃப்ஒசி வெக்டார் கண்ட்ரோல் உடன் சேர்ந்து ஸ்கூட்டரை எளிமையாக கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. இதில் உள்ள 2.1 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    இதில் உள்ள பேட்டரியை 850 வாட் ஸ்மார்ட் சார்ஜர் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். இதில் உள்ள மேம்பட்ட லித்தியம் அயன் பேட்டரி, அதிக செயல்திறன் மற்றும் நீண்ட காலம் உழைக்கும். 2.1 கிலோவாட் ஹவர் பேட்டரியில் அதிக மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது. இது நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும்.

    ஹாப் லியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: இகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் என நான்கு வித ரைடிங் மோட்கள் உள்ளன. இதன் முன்புறம் அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் லோட் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர் உள்ளது. இத்துடன் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக் சிஸ்டம், ரிஜெனரேடிவ் பிரேகிங் போன்ற வசதிகள் உள்ளன.

    Photo Courtesy: Rushlane

    Next Story
    ×