என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பஜாஜ் செட்டாக் சார்ந்த புது ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Byமாலை மலர்8 May 2021 10:26 AM GMT (Updated: 8 May 2021 10:26 AM GMT)
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் வெக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹஸ்க்வர்னா வெக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இ 01 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெக்டார் மாடல் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரின் பவர்டிரெயின் அம்சங்கள் செட்டாக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. ஹஸ்க்வர்னா வெக்டார் பூனே அருகில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ஹஸ்க்வர்னா நிறுவனம் ஆப்-ரோடு மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படுகிறது.
சமீப காலங்களில் ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இ 01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டை ஹஸ்க்வர்னா அறிமுகம் செய்தது. இதில் எதிர்கால ரெட்ரோ தோற்றம் கொண்டிருந்தது.
முன்னதாக ஹஸ்க்வர்னா நிறுவனம் இ பைலென் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களில் ஹஸ்க்வர்னா இரு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கூறப்பட்டது.
Next Story
×