என் மலர்
கார்

க்யூட் தோற்றம் கொண்ட எம்ஜி கொமெட் EV இந்தியாவில் அறிமுகம்
- எம்ஜி கொமெட் EV மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது.
- பாதுகாப்பிற்கு இந்த காரில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்கிங் சென்சார்கள் உள்ளன.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது சிறிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. புதிய எம்ஜி கொமெட் EV மாடல் எம்ஜி நிறுவனத்தின் ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய கொமெட் EV மாடலில் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.
இதில் வழங்கப்பட இருக்கும் 3.3 கிலோவாட் சார்ஜிங் கொண்டு காரை ஏழு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரங்கள் ஆகும். அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 2974mm நீளமாகவும், 1505mm அகலமாகவும், 1640mm உயரமாகவும், வீல்பேஸ் 2010mm ஆக இருக்கிறது.
2023 எம்ஜி கொமெட் EV மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், இலுமினேட் செய்யப்பட்ட எம்ஜி லோகோ, எல்இடி லைட் பார்கள் காரின் முன்புறம், பின்புறம் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 இன்ச் அளவில் ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி எம்ஜி கொமெட் EV மாடலின் உள்புறம் 10.25 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கீலெஸ் எண்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசசதி கொண்ட ORVM-கள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங், பவர் விண்டோக்கள் வழங்கப்படலாம்.
இத்துடன் ஸ்பேஸ் கிரே நிறத்தால் ஆன இண்டீரியர் தீம், லெதர் மூலம் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், 50:50 ஸ்ப்லிட் ரியர் சீட்கள் வழங்கப்படும் ன தெரிகிறது. பாதுகாப்பிற்கு இந்த காரில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிபிஎம்எஸ், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டோர் அன்லாக் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.