search icon
என் மலர்tooltip icon

    கார்

    இன்னும் விலையே தெரியாது.. 2026 வரை விற்றுத்தீர்ந்த லம்போர்கினி கார்..!
    X

    இன்னும் விலையே தெரியாது.. 2026 வரை விற்றுத்தீர்ந்த லம்போர்கினி கார்..!

    • புதிய ரெவல்டோ மாடல் இந்தியாவிலும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய லம்போர்கினி ரெவல்டோ விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    புதிய லம்போர்கினி ரெவல்டோ மாடல் 2026 வரை அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்தது. லம்போர்கினி ஸ்டீபன் வின்கில்மேன் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர்கார் மாடல் இது ஆகும். லம்போர்கினி ரெவல்டோ மாடலில் புதிய ஹைப்ரிட் V12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் முந்தைய வெர்ஷனை விட 17 கிலோ வரை எடை குறைவு ஆகும். என்ஜின் மட்டுமே 825 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணையும் போது செயல்திறன் 1015 ஹெச்பி ஆக அதிகரிக்கிறது. இந்த சூப்பர்காரில் 3.8 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை கொண்டு காரை எலெக்ட்ரிக் மோடில் 9.5 கிலோமீட்டர்கள் வரை ஓட்ட முடியும்.

    புதிய ரெவல்டோ மாடல் இந்தியாவிலும் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் நவம்பர் மாத வாக்கில் வினியோகம் செய்யப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய லம்போர்கினி ரெவல்டோ விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், உள்ளூர் வரிகள் சேர்க்கும் போது சற்று அதிக விலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லம்போர்கின் ரெவல்டோ மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 10 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். அந்த வகையில், இது லம்போர்கினியின் விலை உயர்ந்த சூப்பர் கார் என்ற பெருமையை பெறும் என்று தெரிகிறது.

    Next Story
    ×