search icon
என் மலர்tooltip icon

    பைக்

    151கிமீ ரேன்ஜ் வழங்கும் சிம்பில் டாட் ஒன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
    X

    151கிமீ ரேன்ஜ் வழங்கும் சிம்பில் டாட் ஒன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

    • முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
    • அதிகபட்சம் 105 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் சிம்பில் எனர்ஜி இந்திய சந்தையில் சிம்பில் ஒன் மாடலை கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பில் டாட் ஒன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இதில் 8.5 கிலோவாட் பீக் / 4.5 கிலோவாட் பவர் மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்ட பி.எம்.எஸ்.எம். மோட்டார் உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 40 கிலமீட்டர்கள் வேத்தை 2.77 நொடிகளில் எட்டிவிடும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


    புதிய சிம்பில் டாட் ஒன் மாடலில் 5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் 1024x600 பிக்சல் டச் ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய இன்டர்ஃபேஸ், 4ஜி, ப்ளூடூத் 5.2 வசதிகள் உள்ளன.

    இதன் மூலம் ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே அழைப்புகளை பேசவும், இசையை கேட்கவும் முடியும். இதில் சி.பி.எஸ்., டிஸ்க் பிரேக்குகள், 35 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ், IP67 சான்று பெற்றிருக்கிறது. சிம்பில் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நம்ம ரெட், பிரேசென் பிளாக், கிரேஸ் வைட் மற்றும் அஸ்யூர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.


    இந்திய சந்தையில் புதிய சிம்பில் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிம்பில் ஒன் மாடலில் இருந்து சிம்பில் டாட் ஒன் மாடலுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சிம்பில் எனர்ஜி அறிவித்துள்ளது.

    Next Story
    ×