என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
இதுவும் நல்லா தான் இருக்கு.. புதிய நிறங்களில் அறிமுகமான S1 X மாடல்கள்
- இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் செல்லும்.
- முன்னதாக ஒலா S சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், ஒலா S1 X மாடல்- ஃபன்க், ஸ்டெல்லார், ரெட் வெலாசிட்டி, வோக் மற்றும் மிட்நைட் என ஐந்து டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் அதிக பிரகாசமாகவும், சிங்கில் டோன் நிறங்களை விட அதிக வித்தியாசமாகவும் காட்சியளிக்கின்றன.
நிறங்கள் தவிர ஒலா S1 X மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒலா S1 X மாடலில் 2.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இதே ஸ்கூட்டர் 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 151 கிலோமீட்டர்கள் மற்றும் 190 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவை இம்மாத இறுதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் முன்பதிவுகளை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.