search icon
என் மலர்tooltip icon

    பைக்

    100-க்கும் அதிக அம்சங்கள் - புது ஒ.எஸ். அப்டேட் பெறும் ஒலா ஸ்கூட்டர்கள்

    • புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தியது.
    • புது அப்டேட் மூலம் நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஒலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) முறையில் மூவ் ஒ.எஸ். 4 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இது வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை அடியோடு மாற்றும் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


    புதிய மூவ் ஒ.எஸ். 4 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஒலா S1 ஜென் 1, மேம்பட்ட S1 ப்ரோ மற்றும் S1 ஏர் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலா S1 X பிளஸ் மாடல்களுக்கு வரும் மாதங்களில் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த அப்டேட் மூலம் நேவிகேஷன் வசதி இதற்கு முன்பு இருந்ததை விட அதிவேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒ.எஸ்.-இன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இகோ மோடில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய அப்டேட் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் உள்ள "கேர்" மோட் பயனர்களுக்கு காற்று மாசு அளவு குறித்த தகவல்கள் மற்றும் சேமிப்பு குறித்த விவரங்களை வழங்குகிறது.

    Next Story
    ×