search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஒலா S1 ஏர் மாடலுக்கு ஆகஸ்ட் 1 முதல் புதிய விலை.. வெளியான அறிவிப்பு!
    X

    ஒலா S1 ஏர் மாடலுக்கு ஆகஸ்ட் 1 முதல் புதிய விலை.. வெளியான அறிவிப்பு!

    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
    • இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ஏர் மாடல் முன்பதிவை ஜூலை 27-ம் தேதி துவங்கியது. இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டனர். இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், இந்த விலை ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்பிறகு, ஒலா S1 ஏர் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து ஒலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

    ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஒலா S1 மற்றும் S1 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், இந்த மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிலாட் புளோர்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர டுவின் ப்ரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், வளைந்த பக்கவாட்டு பேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் 7-இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், மியூசிக் பிளேபேக், மூன்று ரைடு மோட்கள், ரிவர்ஸ் மோடு, ரிமோட் பூட் லாக்/அன்லாக், சைடு ஸ்டான்டு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் ஸ்டெல்லார் புளூ, நியான், பொர்சிலைன் வைட், கோரல் கிளாம், லிக்விட் சில்வர் மற்றும் மிட்நைட் புளூ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஏத்தர் 450S மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×