என் மலர்

  பைக்

  நவராத்திரி விற்பனையில் அசத்திய ஒலா எலெக்ட்ரிக்
  X

  நவராத்திரி விற்பனையில் அசத்திய ஒலா எலெக்ட்ரிக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஒலா S1 ஸ்கூட்டர் விற்பனையை சமீபத்தில் துவங்கியது.
  • தற்போது நாடு முழுக்க 20 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இயக்கி வருகிறது.

  ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நவராத்திரி காலக்கட்டத்தில் தனது ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக தெரிவித்து இருக்கிறது. நவராத்திரி விற்பனையின் போது ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் விற்பனையாகி இருக்கிறது. பண்டிகை காலத்தில் மட்டும் விற்பனை நான்கு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

  நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒலா எலெக்ட்ரிக் அறிமுகமான காலக்கட்டத்தில் விற்பனையக காலக்கட்டம் முடிந்துவிட்டதாக தெரிவித்து இருந்தது.

  நாட்டின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு ஆன்லைனிலேயே நடைபெற்று வருகிறது. பண்டிகை காலக்கட்டத்தில் அமோக விற்பனை நடைபெற்ற போதிலும், எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலை ஒலா எலெக்ட்ரிக் அறிவிக்கவில்லை.

  கடந்த மாதம் வரை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 20 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 200 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. மேலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. மேலும் ஒலா S1 ப்ரோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  Next Story
  ×