என் மலர்

  பைக்

  குறைந்த விலையில் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இந்திய வெளியீட்டு விவரம்
  X

  குறைந்த விலையில் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இந்திய வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
  • ஒலா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.

  ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒலா நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டராக இருக்கும் என கூறப்படுகிறது.

  மேலும் இது ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒலா S1 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும். இது ஒலா S1 மாடலின் புது வேரியண்ட் ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 80 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

  ஒலா நிறுவனத்தின் புது ஸ்கூட்டர் வெளியீடு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 22 ஆம் தேதி ஒலா S1 ஸ்கூட்டரின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்கூட்டர் சந்தையில் போட்டியை மாற்றியமைக்கும் என ஒலா தெரிவித்து இருக்கிறது. ஒலா S1 மாடலை தழுவி குறைந்த விலையில் உருவாகி இருப்பதால், புது ஸ்கூட்டரில் ஏராளமான அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

  மேலும் தற்போது வழங்கப்பட்டு இருப்பதை விட அளவில் சிறிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், புது ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

  Next Story
  ×