என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்

மிக குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சூப்பர் டீசர் வெளியிட்ட ஒலா எலெக்ட்ரிக்..!

- ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் ஒலா நிறுவனம் தனது S1 வேரியன்டை நிறுத்திய நிலையில், புதிய ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
டீசரின் படி புதிய ஒலா ஸ்கூட்டர் சற்று வித்தியாசமான ஹேண்டில்பார் மற்றும் ஸ்விட்ச் கியூப்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட கண்ணாடிகள், புதிய ஹெட்லைட் கவுல் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவைதவிர புதிய ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த டிசைன் ஒரே மாதிரியே இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஒலா ஸ்கூட்டரின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புதிய ஸ்கூட்டர் ஒலா S1 ஏர் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்பதால், அதன் அம்சங்கள் மற்றும் ரேன்ஜ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது விற்பனை செய்யப்படும் ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல், இரண்டு ரைடு மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் புதிய ஒலா ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஒலா S1 ஏர் மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
