search icon
என் மலர்tooltip icon

    பைக்

    177 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஹார்லி எலெக்ட்ரிக் பைக் - விரைவில் வெளியீடு!
    X

    177 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஹார்லி எலெக்ட்ரிக் பைக் - விரைவில் வெளியீடு!

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.
    • புதிய ஹார்லி எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது துணை பிராண்டு லைவ்-வயர் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு S2 டெல் மார் லாஞ்ச் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. தற்போது 2024 S2 டெல் மார் வெளியீடு மற்றும் விலை விவரங்களை லைவ்-வயர் அறிவித்து இருக்கிறது.

    புதிய S2 டெல் மார் மாடலின் விலை 15 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12.7 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடல் விலையை விட 1500 டாலர்கள் வரை குறைவு ஆகும். புதிய எலெக்ட்ரிக் பைக் வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது. அமெரிக்காவில் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    புதிய டெல் மார் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 249 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 177 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டெல் மார் மாடல் லெவல் ஒன் மற்றும் லெவல் டூ சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பில்ட்-இன் ஜிபிஎஸ், இண்டர்நெட் கனெக்டிவிட்டி, எல்இடி இலுமினேஷன் போன்ற வசதிகள் உள்ளன. புதிய லைவ்-வயர் S2 டெல் மார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    Next Story
    ×