என் மலர்tooltip icon

    பைக்

    2023 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec இந்தியாவில் அறிமுகம்

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மாடலில் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec விலை ரூ. 83 ஆயிரத்து 368, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மாடலில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள எல்சிடி ஸ்கிரீனில் ஸ்மார்ட்போன் கால், எஸ்எம்எஸ் அலெர்ட் உள்ளிட்டவைகளை பார்க்க முடியும். இத்துடன் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல் ரீட்அவுட் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படுகிறது.

    இவற்றுடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், OBD 2 விதிகளுக்கு பொருந்தும் 124.7 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.7 ஹெச்பி பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற பாகங்களை பொருத்தவரை சிங்கில் பீஸ் சீட், கிராப் ரெயில், ஹாலோஜன் இண்டிகேட்டர்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மாடல் தற்போது கேண்டி பிளேசிங் ரெட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. டைமண்ட் ஃபிரேம் உடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்ப்ரிங்குகள் உள்ளன.

    பிரேக்கிங்கிற்கு பின்புறம் டிரம் பிரேக், முன்புறம் சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 18 இன்ச் அலாய் வீல்கள் 80/100 மற்றும் 90/90 டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் Xtec மாடல் ஹோண்டா CB ஷைன் மற்றும் டிவிஎஸ் ரைடர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×