என் மலர்

  ஆட்டோமொபைல்

  கிராவ்டான் குவாண்டா
  X
  கிராவ்டான் குவாண்டா

  ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிமீ செல்லும் பேட்டரி மோட்டார்சைக்கிள் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவான புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை கிராவ்டான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்து இருக்கிறது.

  ஐதராபாத் நகரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கிராவ்டான் மோட்டார்ஸ் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. கிராவ்டான் நிறுவனத்தின் முதல் பேட்டரி மோட்டார்சைக்கிள் குவாண்டா என அழைக்கப்படுகிறது.

  புதிய குவாண்டா மாடல் அறிமுக விலை ரூ. 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் 2021 அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது. குவாண்டா மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளை கிராவ்டான் மோட்டார்ஸ் 2016 ஆம் ஆண்டு துவங்கியது.

   கிராவ்டான் குவாண்டா

  இந்த மோட்டார்சைக்கிளின் பிரேம், மோட்டார் கேசிங் மற்றும் பேட்டரி போன்றவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. நகரம் மற்றும் கிராமம் என இருதரப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

  புதிய குவாண்டா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படும் 100சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. கிராவ்டான் குவாண்டா மோட்டார்சைக்கிள் 3 kWH லித்தியம் அயன் பேட்டரி கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

  இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். மோட்டார்சைக்கிளை Eco மோடில் இயக்கும் போது 320 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என கிராவ்டான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×