search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இரண்டு மாதங்களில் ரூ. 500 கோடி - விற்பனையில் அசத்திய ஓலா எலெக்ட்ரிக்
    X

    இரண்டு மாதங்களில் ரூ. 500 கோடி - விற்பனையில் அசத்திய ஓலா எலெக்ட்ரிக்

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.
    • எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் 50 சதவீத பங்குகளை ஓலா எலெக்ட்ரிக் பிடித்துள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், 2022-2023 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2022 மாதங்களில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 500 கோடி வரையிலான வருவாய் ஈட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    தற்போதைய நிலவரப்படி இந்த நிதியாண்டின் இறுதியில் 1 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 7 ஆயிரத்து 824 கோடி வருவாயை எட்டும் நிலையில் இருப்பதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    தற்போது ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. "வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக காட்சியளிக்கிறது. ஓலா பியுச்சர் பேக்டரியில் வாகன உற்பத்தியை சீராக இயக்க முடிகிறது."

    "இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எக்கச்சக்க முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால், உற்பத்தி பணிகளை முடுக்கி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×