search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    5ஜி தொழில்நுட்பத்தை சுற்றும் வதந்திகள் மற்றும் உண்மை தகவல்கள்!
    X

    5ஜி தொழில்நுட்பத்தை சுற்றும் வதந்திகள் மற்றும் உண்மை தகவல்கள்!

    • டெலிகாம் சந்தையில் அதிநவீன புது தொழில்நுட்பம் 5ஜி, உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    உலகின் பல்வேறு நாடுகளில் புதிய தலைமுறை டெலிகாம் தொழில்நுட்பான 5ஜி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் பணிகளில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 5ஜி என்பது 5th Gen செல்லுலார் நெட்நொர்க்குகளை குறிக்கும்.

    புதிய தொழில்நுட்பம் வெளியாகும் முன்பே இதுபற்றிய வதந்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டன. அந்த வகையில் புதிய 5ஜி தொழில்நுட்பம் பற்றி அதிகம் வெளியாகி இருக்கும் வதந்திகள் மற்றும் அவற்றுக்கு பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் பற்றி தொடர்ந்து பாரப்போம்.

    மொபைல் போன்களில் மட்டும் வேலை செய்யும்?

    பெரும்பாலானோரும் 5ஜி தொழில்நுட்பம் மொபைல் போன்களுக்கு மட்டும் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இணைய சேவையை மாற்றிக் கொள்ளும் வகையில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை பயனர்களுக்கு இது அதிவேக இணையம், லோ-லேடன்சி மற்றும் தலைசிறந்த கனெக்டிவிட்டி வழங்குகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் பரவலான சாதனங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

    4ஜி - 5ஜி என்ன வித்தியாசம்?

    லேடன்சி, டவுன்லோடு வேகம், பேஸ் ஸ்டேஷன் மற்றும் செல் டென்சிட்டி உள்ளிட்டவை 5ஜி-யில் அதிகளவில் இருக்கும். பயனர்கள் நொடிக்கு அதிகபட்சம் 20 Gb வேகத்தை அனுபவிக்க முடியும். இத்துடன் 1ms லோ லேடன்சி, அதிக தரமுள்ள வீடியோ ஸ்டீரிமிங், ஹை-ரெசல்யூஷன் ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. 5ஜி முந்தைய தலைமுறை 4ஜி நெட்வொர்க்கை விட அதிகளவு அனுபவப்பூர்வமான சேவை ஆகும்.

    5ஜி அதிக மின்திறன் எடுத்துக் கொள்ளும்?

    5ஜி தொழில்நுட்பத்தில் ஆண்டெனாக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படும் என்பதால் மின் பயன்பாடு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு விடும். தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது மட்டுமே இவை பயன்படுத்தப்படும். மேலும் 5ஜி-யில் தகவல் பரிமாற்றம் மற்ற நெட்வொர்க்குகளை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

    உடல் நலத்தை பாதிக்கும்?

    5ஜி நெட்வொர்க்குகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் ஆழமாக பரவி விட்டது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்றும் இந்த கூற்றை நிரூபிக்கும் சான்று இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். 5ஜி மூலம் வெளிப்படும் ரேடியோ கதிர்களும், சிக்னல்களும் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    5ஜி பாதுகாப்பற்றது, வை-பை-க்கு மாற்றாக இருக்கிறது?

    5ஜி தொழில்நுட்பம் மேம்பட்ட பாதுகாப்பை வழங்க இருக்கிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய ஆதெண்டிகேஷன் வழிமுறைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பம் அதற்கும் முந்தைய நெட்வொர்க்குகளை விட மிகவும் பாதுகாப்பானது ஆகும். 5ஜி மற்றும் வைபை இரண்டும் முற்றிலும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் ஆகும். 5ஜி செல்லுலார் நெட்வொர்க் வழங்கும். வைபை குறுகிய ரேன்ஜ் வரை இணைய சேவையை வழங்கும். அந்த வகையில் 5ஜி எப்போதும் வைபை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக முடியாது.

    Next Story
    ×