என் மலர்

  ஆட்டோ டிப்ஸ்

  சன்பியூவல்
  X
  சன்பியூவல்

  கல்கா-சிம்லா நெடுஞ்சாலையில் 120 கிலோவாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜர் - சன்பியூவல் அதிரடி!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையமான சன்பியூவல் தனது முதல் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க இருக்கிறது.

  எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிறுவனம் சன்பியூவல் தனது முதல் 120 கிலோவாட் DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை  கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் சன்பியூவல் அறிமுகம் செய்த “எக்ஸ்பிலஸ் மைல்ஸ்” திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க சன்பியூவல் திட்டமிட்டுள்ளது.

  சன்பியூவல்

  இந்த திட்டத்தின் கீழ் சன்பியூவல் நிறுவனம் முதற்கட்டமாக 70 120 கிலோவாட் CCS DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் இந்தியா முழுக்க 35 நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் செய்து முடிக்க சன்பியூவல் திட்டமிட்டு உள்ளது. 

  120 கிலோவாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும். இவை ஆடம்பர எலெக்ட்ரிக் கார் பயன்படுத்துவோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் மைல்ஸ் திட்டத்தின் கீழ் முதல் அதிவேக எலெக்ட்ரிக் வாகன சார்ஜர் கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் தி ஃபுட் ஸ்டிரீட் சோலன் அருகில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளது.

  Next Story
  ×