என் மலர்

  கன்னி - ஆண்டு பலன் - 2022

  சிம்மம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2022

  வசீகரமான தோற்றம் கொண்ட கன்னி ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டில் மன நிறைவான சுகபோக வாழ்விற்கு மனம் ஏங்கும். அதற்காக கடுமையாக போராட நேரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஏப்ரல் 2022 வரை வருட கிரகமான குருவினால் ஏற்படும் சுப பலன்கள் குறையும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் ராசிக்கு 7ல் செல்லும் குருவினால் சுப பலன்கள் மிகைப்படும்.

  ஆண்டு முழுவதும் சனியின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. ஏப்ரல் 12, 2022 வரை ராகு/கேதுக்களால் பெரிய பாதிப்பு இருக்காது. ஏப்ரலுக்கு மேல் ராகு/கேதுக்களால் சற்று இன்னல்களை சந்திக்க நேரும். அனைத்து விதமான இன்னல்களில் இருந்தும் குரு பகவானின் பார்வை உங்களை காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

  குரு சஞ்சார பலன்: 13.4.2022 வரை 4, 7--ம் அதிபதி குரு 6ல் மறைவதால் கடன் பெற்று உங்களின் வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள்.

  வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். தாய் வழிச் சொத்தால் தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்படும்.

  இதனால் தாயின் உடல் நிலையில் சற்று பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை குறைபடும். சிலருக்கு விவாகரத்தும் நடக்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். களத்திரத்தின் மூலம் சில வீண்மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரும். தொழில் கூட்டாளிகளால் கடன் உருவாகலாம் அல்லது புரிதல் இன்மையால் பிரியலாம். நண்பர்களின் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.

  குருபகவான் பெயர்ச்சியாகி ஏழாடமிடமாகிய மீனத்திற்கு ஏப்ரல் 13ல் செல்லும் போது 6ம் இடத்து குருபகவானால் ஏற்பட்ட இன்னல் முற்றிலும் அகலும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

  சொத்து வாங்கும் முயற்சியில் வாழ்க்கை துணையின் பங்களிப்பும் இருக்கும். வீடு அல்லது தொழில் நிறுவனங்களை மாற்ற நேரும். மன சஞ்சலத்தால் மதம் மாறியவர் மீண்டும் சொந்த மதத்திற்கு மாறுவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான கோர்ட் பிரச்சனைகள் சாதகமாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் மாறும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதியவாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலை மாறும்.

  சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். சனி பகவான் கன்னி ராசிக்கு 5, 6-ம் அதிபதி. உங்களின் ஐந்தாம் அதிபதி சனி ஐந்தில்ஆட்சி பலம் பெறுவதால் நடக்குமா ? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைப்பதற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.

  இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஒடி வரும் 26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 3, 8-ம் அதிபதியான செவ்வாய் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற சனியுடன் இணையப் போகிறார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி இறக்கம் உண்டாகும் அல்லது பதவி விலக நேரும். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி கால விரயம் செய்வார்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். அல்லது கடனுக்காக சொத்தை இழக்க நேரலாம்.

  கன்னி ராசியினர் சொத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளுக்காக அதிக பொருள் விரயம் செய்ய நேரும். சிலர் நண்பர்கள், உறவினர்களின் விஷயத்தில் மாட்டி தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார்கள். அண்டை, அயலாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாருக்கும் ஜாமீன், கியாரண்டி போடக் கூடாது.

  3, 8-ம் அதிபதிகளின் சம்பந்தம் ஏற்படுவதால் வாகன விபத்து ஏற்படும். வாகனங்களை இயக்கும் போது அதிக கவனம் தேவை. வாகனத்தை உரிய பாதுகாப்பு கவசத்துடன் இயக்க வேண்டும்.

  ராகு/கேது சஞ்சார பலன்: 12.4.2022 வரை 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம் என்பதால் ஞானமார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்தயாத்திரை செல்ல ஆர்வம் ஏற்படும். பித்ரு கடனை முறைப்படுத்தி பாக்கியப் பலனை அதிகரிப்பீர்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும்.

  தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களின் நல்லாசிகள் கிட்டும். ஆத்மஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமுக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

  வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும்.

  ஏப்ரல் 12-ல் 2-ல் கேதுவும், 8ல் ராகுவும் பெயர்ச்சியாகும் போது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். சம்பாதித்த அனைத்தையும் பாதுகாப்பது அவசியம். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.

  சில குழந்தைகள் மாற்றாந்தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளுக்கு மந்தத் தன்மை ஏற்படும். நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வப்போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும்.

  திருமணம்: வெகு சிலருக்கு ராசிக்கு 5ம் இடத்தில் உள்ள சனியின் 3ம் பார்வை ஏழாம் இடத்தில் பதிவதால் திருமணம் தடைபடலாம் ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குப் பெயர்ச்சியானவுடன் நிறைய வரன்களின் ஜாதகம் வந்து குவியும். ஆனால் தகுதியான வரனை தேர்ந்தெடுக்கிறேன் என்று காலம் தள்ளுவார்கள்.

  பலர் அழகான மாப்பிள்ளை, மணப்பெண்ணை எதிர்பார்த்து தாங்களே திருமணத் தடையை உருவாக்குவார்கள்.சில பல விசயங்களில் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் பலருக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகமிக குறைவு.

  பெண்கள்: ஏப்ரல்13,2022 வரை பெண்கள் வாழ்க்கைத் துணையிடம் வீண் வம்பைத் தவிர்ப்பதுடன் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உங்களின் பேச்சு எடுபடும். கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் செய்வார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப் பட்டு இருப்பார்கள்.

  விவசாயிகள்: விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். விவசாயமும் செழிக்கும். பணமும் செழிக்கும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். இரண்டு வருட லாபத்தை ஒரே வருடத்தில் பார்ப்பீர்கள். புதிய விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். கால்நடை பண்ணைகள் அமைப்பீர்கள். பலருக்கு வேலை கொடுப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். வேலைப் பளு குறையும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை கிடைக்கும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஏற்கனவே கையிருப்பில் இருந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். தொழில் கூட்டாளிகளிடம் நல்லுறவு நீடிக்கும்.பல புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.பழைய பாக்கிகள் வசூலாகும்.

  அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான காலம். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசு சார்ந்த பணிகளில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு நலன்களை செய்து பொது மக்களின் நல் ஆதரவை பெறுவார்கள்.

  மாணவர்கள்: புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.கல்லூரி, உயர்கல்வியில் இருந்த தடைகள் அகலும். ஆனால் எந்த கல்லுரியில் சேர்வது,என்ன படிப்பு தேர்வு செய்வது போன்ற மனக்குழப்பம் ஏற்படும்.சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.அரியர்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெறுவார்கள். சிலருக்கு ஞாபகக் குறைவு இருக்கும்.

  உத்திரம் 2,3,4: புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு பல தொழில் கிளைகளை திறந்து, தொழில் விரிவு செய்வீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்லவைகள் தொடர தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

  ஹஸ்தம்: உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடித்தால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்து வர முத்தாய்ப்பான மாற்றங்கள் தேடிவரும்.

  சித்திரை 1,2: இதுவரை எந்த வேலையும் செய்யாதவர்ககள், தெரியாதவர்களுக்கு கூட வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை, தொழில் வாய்ப்பு கிடைத்தே தீரும். தீராத கடன், நஷ்டம், ஆபத்து, சிக்கல்கள் விலகி நிம்மதி பிறக்கும். செவ்வாய்கிழமை அரளிப் பூ சாற்றி முருகனை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×